logo
Villa Karuna Home For Seniors
Trusted & Affordable Non-Medical Care for Seniors

18-09-2016 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற SANTHIYAARAGAM 2016 Golden Super singer நிகழ்வின் படத்தொகுப்பு.

article

விலா கருணா” (Home For Seniors) முதியோர் இல்லத்தின் “சந்தியாராகம்

விலா கருணா” முதியோர் இல்லத்தின் 12வது ஆண்டு நிறைவை முன்னிட்டு "சந்தியாராகம்" ஸ்காபரோவிலுள்ள பெரிய சிவன் ஆலய கலாச்சார மண்டபத்தில் மிகவும் சிறப்பான முறையில் மண்டபம் நிறைந்த பார்வையாளர்கள மத்தியில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக பேராசிரியர் இ.பாலசுந்தரம் அவர்களும், கௌரவ விருந்தினர்களாக கனடிய பாராளுமன்ற உறுப்பினர்களான பால்கின்சன், பிராட், ஜிம் ஹரியானிஸ் ஆகியோர் கலந்து கொண்டு பாராட்டுக்களைத் தெரிவித்திருந்தனர். நிகழ்வில் நடனங்கள், முதியவர்களின் விநோத உடைப்போட்டி, முதியோரின் (பெண்களின்) வில்லுப்பாட்டு, மற்றும் இன்னிசையுடன் சுவையான உணவும் பரிமாறப்பட்டன. villa karunaகுழந்தை பருவத்தில் குதூகலித்து, இளமையில் ஆடி அனுபவித்து, நடுத்தர வயதில் வாரிசுகளுக்காக ஓடாய் உழைத்த பலர் இன்று முதுமை எனும் வாசலில் மனம் நிறைய ஏக்கங்களுடன் பாசத்துக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். முதுமை என்ற ஒரே காரணத்துக்காக அவர்களை தூரத்தில் வைக்கின்றன உறவுகள். நடக்க இயலாத நிலையில் மற்றும் வீட்டில் பராமரிக்க முடியாமல் இருப்பவர்களை சேவை மனப்பான்மையுடன் ஒரு பெண் 12 வருடங்களுக்கு முன்பே சிந்தித்து துணிச்சலோடு தமிழ் பெண்களுக்கான ஒரு முதியோர் இல்லத்தை ஆரம்பித்து இருந்தார். இந்திராணி நாகேந்திரா என்ற அந்ந சமூக சேவகி தன் தாயின்மீது கொண்ட அளப்பரிய அன்பின் காரணமாக தனது தாயின் பெயரில் “வில்லா கருணா” எனும் முதியோர் இல்லம் ஒன்றை நடத்தி வருகிறார். கருணைமிக்க ஸ்தாபனங்களின நன்கொடைகளால் மட்டுமே அவ்வில்லம் நடைபெற்று வருகிறது. அரச உதவியோ அறக்கட்டளை மூலமோ எதுவித உதவியும் கிடைப்பதில்லை.

இந்திராணி அவர்களின் தீர்க்க தரிசனம் போல் யாருமே சிந்திக்காத வகையில் முதியோர் இல்லத்தை ஆரம்பித்தது வியப்புக்குரியது. இந்திராணி அவர்கள் நான்கு பேரோடு தொடங்கிய “விலா கருணா” வின் அதிபதி ஆவார். ஆரம்பத்தில் அங்கே வேலை செய்யும் ஆட்களுக்கு வேதனம் கொடுக்கும் நிலையில் வளம் போதாத காரணத்தால் தம் குடும்பத்தவருக்கே தேவையான பயிற்சி கொடுத்துத் தாதிமார் தகுதியைக் கொடுப்பித்தார். அவரது சகோதிகள், மகன்மார் மூவர், தாயார் அவர்கள் ஏற்ற பயிற்சிகள் பெற்று மிகக்குறைந்த வேதனமாகவோ அல்லது சேவையடிப்படையில் இலவசமாகவோ பணிபுரிந்து வருகின்றனர். Santhiyaragam-3“விலா கருணா” வின் முதியோர்களை வைத்தியசாலை போன்ற இடங்களுக்கு ஏற்றி இறக்கும் பணியை அவரது புதல்வர்கள் மூவரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். தாதி சேவையில் இருப்பவர்களை மேற்பார்வை செய்வதும் நள்ளிரவுப் பணியை மேற்கோள்வதும் இவரது தாயார். இத்தகைய பணிகளுக்காண பயிற்சிகளை தமது கல்வியோடு மேற்கொண்டு இவருக்கு உதவி செய்பவர்கள் சகோதரி குடும்பங்கள். இப்போது அங்கே பத்து முதியோர் இருக்கின்றனர். Community Care Access Centre (CCAC) இன் உதவி பெறுவோருக்கு அவர்கள் வந்து தம் சேவையை ஆற்றுகின்றனர்.